திருவண்ணாமலை: சட்டப்படிதத்தெடுக்காமல், சென்னையில் ரகசியமாக கைமாறிய பச்சிளம் பெண் குழந்தையை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தை சேர்ந்தவர் 48 வயது பெண். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவருவடன் சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் சிறிய மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அந்த பெண், பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ்சுக்கு காத்திருந்தார். சிலர் அந்த குழந்தையை பற்றி அவரிடம் விசாரித்துவிட்டு, பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் அவரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது, சென்னையில் மளிகை கடை நடத்தி வரும் அறிமுகமான ஒருவர் மூலம் இந்த குழந்தையை வாங்கியதாக கண்ணீருடன் தெரிவித்தார். குழந்தையின் தாய், அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் தத்துக்கொடுக்க இருந்ததாகவும், தனக்கு 25 ஆண்டுகளாக குழந்தையில்லாததை கூறி தாயின் ஒப்புதலுடன் பெற்று வந்ததாகவும், தத்தெடுக்கும் வழிமுறை தெரியாது என்றும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை செம்மஞ்சேரியில் குறிப்பிட்ட பெண்ணை தொடர்புகொண்டு விசாரித்தனர். குழந்தையை வளர்க்க முடியாமல் கொ