சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கோவிட் பரவல்.. போரில் ஈடுபட்டுள்ளதாக கூறும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்


கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


மீண்டும் கொரோனா பரவல்

சீனாவில் புது வகையான கோவிட்  நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது.

தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

பலர் கொரோனாவால் உயிரிழந்து வருவதாக கூறப்படும் நிலையில், சீனா எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கோவிட் பரவல்.. போரில் ஈடுபட்டுள்ளதாக கூறும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் | Xi Jinping Speech About War Against Covid 19

@Getty Images

ஜி ஜின்பிங் உரை

இந்த நிலையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

கோவிட் பரவல் குறித்து அவர் கூறுகையில்,

‘அசாதாரண முயற்சிகளால் நாம் முன் எப்போதும் இல்லாத சிரமங்களையும், சவால்களையும் வென்றுள்ளோம்.

இது யாருக்கும் எளிதான பயணமாக இருக்கவில்லை. கொரோனாவிற்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் சீனாவிற்கு கடுமையான சவால்கள் உள்ளன. சீன மக்களின் முன்னே நம்பிக்கையின் ஒளி உள்ளது.

விடாமுயற்சி, ஒற்றுமை மூலம் துயரங்களை கடந்து வெற்றி பெறுவோம்’ என தெரிவித்துள்ளார்.

ஜி ஜின்பிங்/Xi Jinping

@AP

அவரது உரையில் தற்போதைய கோவிட் பரவல் குறித்த தரவுகள் எதையும் ஜி ஜின்பிங் வெளியிடவில்லை. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.