காஷ்மீரில் 2022ஆம் ஆண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட மொத்த 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஏடிஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 26 பேர் வீரமரணம் அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெரியளவில் வெற்றி கிடைத்துள்ளதாகவும், செயல்பாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாகக் குறைக்கப்பட்டதாகவும் ஏடிஜிபி கூறினார்.