காஷ்மீரில் நடப்பாண்டில் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் 93 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன என்றார். இதில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 42 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார்.
கொலை செய்யப்பட்டவர்களில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர். 35 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர் என்று அவர் கூறினார். 22 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆகும்.
கடந்த ஆண்டை காட்டிலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது என்றார். 100 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதில், 74 பேர் லஷ்கர் அமைப்பில் இணைந்ததாகவும், பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
பயங்கரவாதிகளில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், அவர்களிடம் இருந்து 360 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் 29 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
newstm.in