புத்தாண்டு வந்த கதை | The story of the new year

புத்தாண்டு வந்த கதை

ஆங்கில புத்தாண்டு (2023) இன்று பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.

ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது. கி.மு., 45ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் சீசரின் ‘ஜூலியன் காலண்டர்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் இடம்பெற்றன. ஜன., 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பாவின் சில நாடுகளில் டிச., 25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு தேதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.

உலக நாடுகள் ஏற்பு

பின், ‘ஜூலியன் காலண்டரில்’ உள்ள, ‘லீப் இயர்’ கணக்கீடுகளை சரி செய்து செம்மைப்படுத்தினார் ரோமை சேர்ந்த போப் கிரிகோரி. 1582ல், ‘கிரிகோரியன் காலண்டரை’ அறிமுகப்படுத்தினார். இதில், ஜூலை, ஆகஸ்ட் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள், ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.

ஜன., 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டன. 1752 வரை, பிரிட்டன் இக்காலண்டரை ஏற்றுக் கொள்ளவில்லை. சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும், ‘கிரிகோரியன் காலண்டரை’ அடிப்படையாகக் கொண்டு ஜன., 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.