பொலிவியா நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரும் சாண்டா குரூஸ் ஆளுநருமான லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்கள் கார்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
சாண்டா குரூஸில் நடைபெற்ற போராட்டத்தில் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து போக்குவரத்தை முடக்கினர்.
பல இடங்களில் டயர்களை எரித்ததுடன், போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்தி எரிந்ததால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.