மதுரை: விருதுநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். பார்வை குறைபாடுடையவர். இவரது மனைவி விஜயராணி. கூலித்தொழிலாளி. இவர்களின் மகன் நந்தகுமார், அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். கடந்த 4.11.2017ல் ஆரம்ப சுகாதார மையத்தின் அருகே நண்பர்களுடன் விளையாடினார். அப்போது அங்கிருந்த ஸ்விட்ச் பெட்டியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். மகன் இறப்பிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி கடந்த 2019ல் ஐகோர்ட் மதுரை கிளையில் பெற்றோர் மனு செய்தனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். எனவே, இந்த நிவாரணத்தை 12 வாரங்களில் பெற்றுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.