பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கணக்கில் வோல்வ்ஸ் அணியை வீழ்த்தியது.
மார்கஸ் ராஷ்ஃபோர்ட்
இங்கிலாந்தின் Molineux மைதானத்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் வோல்வ்ஸ் அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் சமனில் இருந்தது. பிற்பாதியில் மான்செஸ்டர் அணியினர் ஆக்ரோஷம் காட்டினர்.
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் மிரட்டலாக கோல் அடித்தார்.
எதிரணியின் ஐந்து வீரர்களை கடந்து, மின்னல் வேகத்தில் செயல்பட்ட ராஷ்ஃபோர்ட் லாவகமாக பந்தை வலைக்குள் தள்ளினார்.
@Getty Images
10வது வெற்றி
அவர் அடித்த கோல் மான்செஸ்டர் அணியின் வெற்றிக்கான கோலாக மாறியது. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ராஷ்ஃபோர்ட் அடிக்கும் 65வது கோல் இதுவாகும்.
ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வோல்வ்ஸ் அணியை வீழ்த்தியது.
புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இது 10வது வெற்றி ஆகும்.
@Getty Images