மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட்டிற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
16ஆம் பெனடிக்ட் மறைவு
முன்னாள் போப் ஆண்டவரான 16ஆம் பெனடிக்ட் தனது 95வது வயதில் காலமானார்.
ஜேர்மனியைச் சேர்ந்த பெனடிக்ட், 600 ஆண்டுகளுக்கு பின் பதவியை துறந்த முதல் போப் ஆண்டவர் ஆவார். அவரது மறைவுக்கு உலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜஸ்டின் ட்ரூடோவின் இரங்கல்
அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘புனித திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், தனது நம்பிக்கைக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
அவர் ஒரு சிறந்த இறையியலாளர் மற்றும் அறிஞராக இருந்தார்.
His Holiness Pope Emeritus Benedict XVI dedicated his life to serving his faith. He was an accomplished theologian and scholar, and he was an inspiration to millions. My thoughts are with Catholics around the world and all those who are mourning his passing.
— Justin Trudeau (@JustinTrudeau) December 31, 2022
மேலும் அவர் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்தார்.
எனது எண்ணங்கள் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் மற்றும் அவரது மறைவால் துக்கத்தில் இருக்கும் அனைவருடனும் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.
@SEAN KILPATRICK/THE CANADIAN PRESS
@ETTORE FERRARI/REUTERS