13 வேடங்களில் சூர்யா
பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 3 டி தொழில் நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகி வரும் இப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த நிலையில், சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் ஆறு கெட்டப்புகளில் நடித்திருந்தார் விக்ரம். இந்த நிலையில் தற்போது கமல், விக்ரமை மிஞ்சு வகையில் தனது 42 வது படத்தில் 13 வேடங்களில் நடிக்கிறார் சூர்யா.