2022ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே உண்டு.
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக விடைபெறும் 2022ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகி உள்ளது.
அரசியல் யாப்புக்கு அமைவாக பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வும் இந்த ஆண்டில் இடம்பெற்றுள்ளமை முக்கிய அம்சமாகும். நீண்டகாலமாக நிலவிய ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கும் குறிப்பிடத்தக்க தீர்வும் இந்தாண்டில் காணப்பட்டமை இலங்கை வரலாற்றில் மற்றுமொரு நிகழ்வாகும்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகரித்ததினால் பொதுமக்கள் நெருக்கடிக்கு உள்ளாமையும் இந்தாண்டிலே ஆகும். இது இலங்கை மக்கள் எதிர்கொண்ட மற்றுமொரு அனுபவமாகும். விவசாயத்திற்காக சேதன பசளை பயன்படுத்தப்பட்டமை நடைமுறை சாத்தியமில்லை என்பதும் இந்தாண்டில் கண்டறியப்பட்ட உண்மையாகும். இதனால் சமகால அரசாங்கம் விவசாயிகளுக்கு இரசாய உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.
பிறக்கவுள்ள 2023ஆம் ஆண்டில் எதிர்கொள்ளப்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு தற்பொழுது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.