2022ம் ஆண்டில் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; காஷ்மீர் போலீஸ் தகவல்.!

2022 ஆம் ஆண்டில் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட 90 க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் 42 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது. “2022 ஆம் ஆண்டில், காஷ்மீரில் மொத்தம் 93 வெற்றிகரமான என்கவுண்டர்கள் நடந்தன. அதில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உட்பட 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) விஜய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 108 பேர் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) அல்லது அதன் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) யைச் சேர்ந்தவர்கள். அதைத் தொடர்ந்து 35 பேர் ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்), 22 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீன் (எச்எம்) , அல்-பத்ரிலிருந்து நான்கு மற்றும் அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் (AGuH) இலிருந்து மூன்று பேர் என மொத்தம் 172 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 2022ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் என்கவுண்டர்களில் 14 ஜம்மு காஷ்மீர் காவல்துறை (ஜேகேபி) வீரர்கள் உட்பட 26 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். அதேபோல் பயங்கரவாதிகளால் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

29 பொதுமக்கள் கொல்லப்பட்டவர்களில், மூன்று காஷ்மீரி பண்டிட்டுகள் உட்பட ஆறு இந்துக்கள், மற்றும் 15 முஸ்லிம் உள்ளூர்வாசிகள் மற்றும் எட்டு பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதேபோல் இந்த ஆண்டில் 100 புதிய ஆட்சேர்ப்புகளை பயங்கரவாத அணிகளில் சேர்த்துள்ளனர். ஆனால் இது முந்தைய ஆண்டை விட 37 சதவீதம் சரிவு என ஏடிஜிபி குமார் கூறியுள்ளார்.

“அதிகபட்சம் 74 பேர் LeTஇல் சேர்ந்தனர். மொத்த ஆட்சேர்ப்புகளில், 65 பயங்கரவாதிகள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர். 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் 18 பயங்கரவாதிகள் இன்னும் செயலில் உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார். இந்த ஆண்டு கொல்லப்பட்ட 65 புதிய பயங்கரவாதிகளில், 58 முதல் 89 சதவீதம் அவர்கள் இணைந்த முதல் மாதத்திலேயே கொல்லபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதைக் குறிப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் என்கவுண்டர்கள் மற்றும் பயங்கரவாதிகளை முறியடித்தபோது 360 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்.

இதில் 121 ஏகே-சீரிஸ் துப்பாக்கிகள், எட்டு எம்4 கார்பைன் மற்றும் 231 பிஸ்டல்கள் அடங்கும். தவிர, சரியான நேரத்தில் கைப்பற்றப்பட்ட ஒட்டும் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள், பெரிய பயங்கரவாத சம்பவங்களைத் தடுத்தன என குமார் தெரிவித்தார்.

உயிரை காப்பாற்றிக்க ரிஷப் பந்த் எடுத்த முடிவு.. பகீர் தரும் சிசிடிவி காட்சிகள்

மேலும் இந்த ஆண்டில் சமூகத்தில் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்பட்டதாக அவர் கூறினார். வீட்டு உரிமையாளர்கள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மறுப்பது நடந்துள்ளதாக அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.