2022ஆம் ஆண்டில் காஷ்மீரில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை அம்மாநில ஏடிஜிபி விஜயகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 93 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 172 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பையும், 35 பேர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பையும் சேர்ந்தவர்கள். 22 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பையும், 4 பேர் அல் பதர் அமைப்பையும், 3 பேர் அன்சர் கஷ்வாதுல் ஹிந்த் என்ற அமைப்பையும் சேர்ந்தவர்கள் என காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் காஷ்மீர் இந்துக்கள். 15 பேர் இஸ்லாமியர்கள். 8 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM