விடுதலை படப்பிடிப்பு முழுவதும் நிறைவு

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிக்கும் படம் விடுதலை. இதனை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிக்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார். இரண்டு பாகமாக தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. விஜய்சேதுபதி, சூரி தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், நடிக்கிறார்கள்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கெனவே … Read more

விவசாயிகள் தான் காரணம்… பழனிச்சாமி காரணமல்ல.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி..!!

மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “அதிமுகவின் சட்ட விதிகள் படி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும் இனி ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தற்பொழுது வரை இருந்து வருகிறோம். அதன் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் தற்பொழுது வரை கடிதம் அனுப்பியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்படுவதாக சிலர் தவறான தகவலை பரப்புகின்றனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் … Read more

“15-க்கும் மேற்பட்ட போலி திருமணங்கள்; லட்சக்கணக்கில் பண மோசடி!" – இளம்பெண் மீது `பகீர்' புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வனச்சரக அலுவலராக பணியாற்றிவருபவர் மோகன் என்கிற முகமது (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். கடந்த 2020-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இவர் பணியாற்றியபோது, முகநூலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து முகநூலில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு வாட்ஸ்அப்பில் பழக்கத்தை தொடர்ந்தனர். அப்போது அந்தப் பெண் மோகனிடம், “நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள … Read more

ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சுட்டிகாட்டியுள்ளார். இதற்குமுன் பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராடியபோது, அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறிய நிலையில், தற்போது பணிநிரந்தரம் வழங்கப்படாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் … Read more

4 நாட்கள், 30+ கலை வடிவங்கள் – ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ முக்கிய அம்சங்கள்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்துகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்: ‘சென்னை சங்கமம்… நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளின் தொடக்க விழா 13.01.2023 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மிகத்திறமை வாய்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கலைக்குழுக்களோடு நடத்தும் கண்கவர் கலைவிழா அரங்கேற்றப்படும். அதைத் தொடர்ந்து 14.01.2023, 15.01.2023, 16.01.2023 … Read more

6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்

புதுடெல்லி: உலகெங்கிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சோதனை நடத்தப்பட வேண்டும். அதில், கரோனா … Read more

துணை முதல்வர் உதயநிதி.. அமைச்சர் பரபரப்பு தகவல்கள்!

முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்ட பேரவை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து இளைஞர் அணி செயலாளராக உள்ள எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிகே சேகர் பாபு உள்பட திமுக அமைச்சர்கள் மட்டுமல்லாமல் மூத்த நிர்வாகிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்கிற … Read more

இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் ரத்து; திருப்பதி பக்தர்கள் ஷாக்!

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி வரும் ஜனவரி 2ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதில் இருந்து ஜனவரி 11ம் தேதி இரவு 11.59 மணி வரை 10 … Read more

2023-ல் பிரச்சினைகள் தீராது., பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் புத்தாண்டு வீடியோ செய்தி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் புத்தாண்டு வீடியோ செய்தியில் ‘2023-ல் பிரச்சினைகள் தீராது’ என்று எச்சரித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான பிரித்தானிய பிரதம மந்திரி ரிஷி சுனக் சனிக்கிழமையன்று தனது முதல் புத்தாண்டு செய்தியில், கடினமான 12 மாதங்களின் முடிவில் “பிரித்தானியாவின் பிரச்சினை 2023-ல் நீங்காது” என்று எச்சரித்துள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் அம்சங்களில் பிரித்தானியாவிற்கு 2022-ஆம் ஆண்டு கடினமாக இருந்தது. ஓய்வில்லாமல் உழைப்பேன் Twitter Screenshot @10DowningStreet அந்த வீடியோவில், புத்தாண்டில் நமது … Read more