இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!

சில நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போது எந்த விலைக்கு மாறும் என்று தெரியாமல் குழப்பத்திலேயே உள்ளனர். தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிபாக்க தமிழகத்தில் உள்ள பெண்களக்குக்குத்தான் அதிகம். அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 4,936 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஆபரணத் தங்கம் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு … Read more

விபத்து என நாடகமாடிய கணவன் கைது..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷாலு தேவி (32). இவர் கடந்த 5-ம் தேதி, தனது அண்ணனுடன் பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஷாலு தேவியும், அவரது அண்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், விபத்தாக கருதி வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், மனைவியின் உடல் ஒப்படைக்கப்பட்டதும் … Read more

`ஜி20-க்கு தலைமையேற்ற இந்தியா' – காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?!

`உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இன்று (டிசம்பர் 1) இந்தியா ஏற்றிருக்கிறது. பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக உள்ள நாடுகள் முதல் உலகநாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியாவின் தலைமைத்துவம் அவற்றை எப்படி சமாளிக்கும்?’ ஜி-20 – இந்தியா ஜி-20 கூட்டமைப்பு: தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகளாவியப் பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா, … Read more

விவசாயிகளின் உரத் தேவையைப் பூர்த்தி செய்ய 90,000 டன் யூரியா இறக்குமதி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல் 

சென்னை: தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக 90,000 டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், ரசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வரப்பெற்ற … Read more

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு வழக்கு

புதுடெல்லி: குஜராத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, தாஹோத் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது 3 வயது குழந்தை உட்பட7 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் … Read more

ஜல்லிக்கட்டை காண தமிழ்நாட்டுக்கு வாங்க… உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு திமுக அரசு பகிரங்க அழைப்பு!

ஜல்லிக்கட்டு தடை கோரி வழக்கு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படும் காளைகள் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி பீட்டா தன்னார்வ அமைப்பு உசச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அரசு தரப்பு வாதம்: அரசியல் சாசன அமர்வின் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் … Read more

அஜித்தின் சொந்த வாழ்க்கையும், துணிவும் ஒத்துப்போகும் – போனிகபூர் அசத்தல் அப்டேட்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத்துடன் அஜித் கைகோர்த்திருக்கிறார். முதல் இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூழலில் துணிவு படம் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. அஜித் இதுவரை நடித்த நெகட்டிவ் ரோல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதனால் துணிவு படம் ஹிட்டடிக்கும் என காத்திருக்கின்றனர் ஏகே ரசிகர்கள். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி … Read more

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.560.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்குப்பட்ட 136 கிராம பஞ்சாயத்துகளில் … Read more

FIFA உலகக்கோப்பையில் நெகிழ்ச்சி: மனமுடைந்த ஈரான் வீரரை கட்டியணைத்து தேற்றிய அமெரிக்க வீரர்

FIFA உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுவதால் மனமுடைந்து கண்கலங்கிய ஈரானிய வீரரை அமெரிக்க வீரர் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கத்தாரில் புதன்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை ஆட்டத்தில் ஈரான் அணியை அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதனால் ஈரானின் FIFA உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. ஆனால், ஆட்டத்தின் முடிவில் அமெரிக்க வீரர் செய்த செயல் ரசிகர்களின் இதயங்களை வென்றது. உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதை தாங்கிக்கொள்ளமுடியாத ஈரானிய வீரர் ரமின் … Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

திருப்பூர்: ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  இடங்களின் தற்போதைய நிலை குறித்தும், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் ஆகிய நலத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.   சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, (30.11.2022)  அன்று  தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் … Read more