வானிலை முன்னறிவிப்பு | டிச.5-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் … Read more

பிரதமர் மோடியை இழிவாகப் பேசிய காங்கிரஸுக்கு வாக்குப் பெட்டி மூலம் குஜராத் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: அமித் ஷா

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை இழிவாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மக்கள் தங்கள் வாக்குப் பெட்டி மூலம் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று(டிசம்பர் 1) நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 19.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குகளை அளித்து வருகின்றனர். வாக்காளர்கள் எளிதாக … Read more

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? விளக்கும் ராமதாஸ்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குத் தேவையான அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது மத்திய … Read more

Oneplus பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 4 வருட OS மற்றும் 5 வருட பாதுகாப்பு!

இந்தியாவில் முன்னணி பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனமான Oneplus அதன் போன்களுக்கு இனி 4 வருட Oxygen OS வசதி மற்றும் 5 வருட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது அந்த போன் பயன்படுத்தும் அனைவரையும் மகிழ்கியில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் 3 வருட OS அப்டேட் வழங்கும் நிலையில் Oneplus நிறுவனமும் கூடுதலாக 4 வருடம் வழங்குவது சிறப்பான ஒரு முயற்சி ஆகும். இந்த புதிய முயற்சி காரணமாக இனி Oneplus ஸ்மார்ட்போன்களை மிகவும் தைரியமாக … Read more

காங்கிரஸின் 100 தலை ராவணன் கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி

பஞ்சமஹால், குஜராத்: என்னை யார் அதிகம் கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று காங்கிரசில் போட்டி நிலவுகிறது…அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோதி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்வரும் 5ம் தேதி “தாமரைக்கு” வாக்களிப்பதே, காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டும் வழி என்று குஜராத் தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். கலோலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோதி, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் இந்த நிலைக்கு … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதலா இல்லையா? ஆளுநரை சந்தித்த பிறகு ரகுபதி விளக்கம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். பலர் பணத்தை இழந்து செய்வதறியாது நெருக்கடியில் சிக்குகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் … Read more

வரவேற்பு மேடையில் தகாத முறையில் நடந்துகொண்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமகன் வரவேற்பு மேடையில் மணப்பெண்ணுக்கு முத்தமிட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. திருமண வரவேற்பு உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த 27ஆம் திகதி 26 வயது நபருக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றிருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியபோது, அனைவரது முன்னிலையிலும் மணமகன் மணப்பெண்ணுக்கு முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த … Read more

‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும்! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..

பாட்னா:  ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும் என  பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்படுவதில் ஒரே நாடு ஒரே கொள்கை திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று  அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார்,  மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மற்ற மாநிலங்களை விட, பீகார் அதிக விலைக்கு மின்சாரம் பெறுகிறது. நாங்கள் அதிக விலையில் மின்சாரத்தை வாங்குகிறோம் … Read more

செம்மொழி ரயிலில் இரட்டை இன்ஜினை சோதனை ஓட்டத்துடன் நிற்காமல் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வழியாக செல்லும் கோவை- மன்னார்குடி செம்மொழி விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இரட்டை இன்ஜின் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளதை வரவேற்றுள்ள பொதுமக்கள் விரைவில் நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு இன்ஜினுடன் இயக்கப்பட்டு வரும் இந்த விரைவு ரயில் நாள்தோறும் கோவையிலிருந்து புறப்படும் விரைவில் காலை 6.30 மணியளவில் நீடாமங்கலம் வந்து இன்ஜின் திசை மாற்றி மன்னார்குடிக்கும், … Read more

தாம்பரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி

சென்னை: தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.