மேகதாது அணை கட்டுவதற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்: ஒன்றிய அரசிடம் கர்நாடக முதலமைச்சர் கோரிக்கை

டெல்லி : மேகதாது அணை கட்டுவதற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் மராட்டியம் உடனான எல்லை பிரச்சனை குறித்து கர்நாடக அரசு சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் நேரில் சந்தித்து காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்க ஆவணம் … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் நிறைவேற்றிய தீர்மானங்களின் விவரங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.ராசா, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு … Read more

”இத்தனை பேர் முன்னாடி இப்படியா பண்றது?” – முத்தமிட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

மணமேடை வரை சென்ற பிறகு நின்றுப் போன திருமணங்கள் குறித்து கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் ஏராளமான விருந்தினர்கள் முன்பு மணமகன் முத்தமிட்டதால் மணமகள் திருமணத்தையே நிறுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா? அப்படியொரு சம்பவம்தான் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. கடந்த செவ்வாயன்று (நவ.,28) வரமாலை சடங்கு முடிந்த பிறகு 300க்கும் மேலான விருந்தினர்கள் முன்னிலையில் மணமகளை மணமகன் முத்தமிட்டிருக்கிறார். இதனால் கடுப்பான அந்த 23 வயது மணப்பெண் மணமேடையில் இருந்து வெளியேறி போலீசுக்கு ஃபோன் மூலம் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது … Read more

டிசம்பர் 1: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸூம்! #OTTGuide

வாராவாரம் திரையரங்கிலும், ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், வெப் தொடர்கள், ஆவணப் படங்கள் என நிறைய படைப்புகள் வெளிவருகின்றன. அவை எந்தெந்த தளங்களில் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்: கோல்ட் (மலையாளம்) – டிசம்பர் 1, (தமிழ்) – டிசம்பர் 2டி.எஸ்.பி. (தமிழ்) – டிசம்பர் 2கட்டா குஸ்தி (தமிழ்) – டிசம்பர் 2தெற்கத்தி வீரன் (தமிழ்) – டிசம்பர் 2ரிவெட் (தமிழ்) – டிசம்பர் 2மஞ்சக்குருவி (தமிழ்) – டிசம்பர் 2Hit: The 2nd … Read more

பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல், ஜடேஜா மனைவி ஓட்டளிப்பு| Dinamalar

ஆமதாபாத்: குஜராத் சட்டசபை முதல் கட்ட தேர்தலில், பா.ஜ., தலைவர் சி.ஆர். பாட்டீல், ஜடேஜா மனைவி, பூபேந்திர படேல் உள்ளிட்ட தலைவர்கள் இன்று(டிச.,01) ஓட்டளித்தனர். குஜராத்தில் இன்று(டிச.,01) முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குஜராத்தில் மொத்தம் 4 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 400 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்றைய தேர்தலுக்காக, 34 ஆயிரத்து 324 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், … Read more

தமிழில் இன்று 'கோல்டு' வெளியாகாதது ஏன்?

'நேரம், பிரேமம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் 'கோல்டு'. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், டப்பிங் வேலைகள் தாமதமான காரணத்தால் இன்று படம் வெளியாகாமல் போய்விட்டது. காலை 8 மணிக்கு மலையாள மொழிக் காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவையும் ரத்து செய்யப்பட்டன. காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. மலையாளத்தில் மட்டும் இன்று வெளியாகியுள்ள … Read more

போலி முத்திரை பதிவுகளை , பயன்படுத்தி பெண்களை ஓமான் நாட்டுக்கு அனுப்ப முயன்ற பெண் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின், போலி முத்திரை பதிவுகளை  பயன்படுத்தி ,பெண்களை ஓமானுக்கு அனுப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யும் போது கடவுச்சீட்டில் ஒட்டப்படும் முத்திரையை போலியான முறையில் பயன்படுத்தி ஓமானுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, கொழும்பு ஆட்டுப்பெட்டித் … Read more

Aadhar- EB Link: ஆதார்- இ.பி இணைப்பில் விரைவில் இந்த மாற்றம்; அப்லோடு செய்வதற்கு பதிலாக ஓ.டி.பி!

Aadhar- EB Link: ஆதார்- இ.பி இணைப்பில் விரைவில் இந்த மாற்றம்; அப்லோடு செய்வதற்கு பதிலாக ஓ.டி.பி! Source link

#தமிழகம் | ஆபாச படம் பார்த்தவர் வீட்டில் சிபிஐ ரைடு – வசமாக சிக்கியது எப்படி? முழுவிவரம்!

மணப்பாறை அடுத்த பூமாலைபட்டியை சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டில், சிபிசி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிறார் ஆபாச வீடியோக்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மகன் ராஜா (44 வயது) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு தற்போது பூமாலைபட்டியல் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ராஜாவின் வீட்டில் … Read more

அரசு விடுதி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை வடபழனி திருநகர் ஹாஸ்டல் சாலையில், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, விடுதியில் தங்கி இருந்த 4 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே சக மாணவர்கள், பாதிக்கப்பட்ட 4 மாணவர்களையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று … Read more