"டீக்கடையில் ரெட்டை கிளாஸ் முறை; மளிகை கடையில எந்தப் பொருளும் தருவதில்லை!" – பட்டியலின மக்கள் புகார்

ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தில் தீண்டாமை கொடுமை நிலவுவதாகவும், பட்டியலின மக்களுக்கு கடைகளில் பொருள்கள் தருவதில்லை, டீ கடையில் இரட்டைகுவளை முறை நடைமுறையில் இருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக முடிதிருத்தும் கடையின் உரிமையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மூடப்பட்ட சனூன் கடை ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்னை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த ஊரிலுள்ள டீக்கடையில் இரட்டைக் குவளை முறை … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா; ஆளுநர் விரைவில் முடிவு செய்வார்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ” ஆளுநரிடம் இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே கால நிர்ணயம் செய்யும்படி நாம் கேட்க முடியாது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை … Read more

ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியாவின் இலக்கு: ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்…

ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியாஇன்று ஏற்கிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது.. ஜி-20 அமைப்பின் முந்தைய 17 தலைமை நாடுகள் எடுத்த முயற்சிகளால் ஏற்பட்ட விளைவுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்தல், சர்வதேச வரிவிதிப்பை முறைப்படுத்துதல், நாடுகள் மீதான கடன் சுமையை தளர்த்துதல் ஆகியவை அடங்கும். இந்த சாதனைகள் மூலம் நாம் பயன்பெறுவோம், மேலும் வளர்ச்சியடைவோம். இருப்பினும் இந்த முக்கியமான பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், ஜி-20 மேலும் சிறப்பாக செயல்பட முடியுமா, … Read more

உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 5ஆம் தேதிக்கு மேல் சம்பவம் இருக்கு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வாக்கில் தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் … Read more

குஜராத் தேர்தல்: காங்கிரஸ் கோட்டையில் டமால்… குறிவச்ச பாஜக… வீறுகொண்ட ஆம் ஆத்மி!

நாடே எதிர்பார்த்த குஜராத் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதாவது, முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் 5ஆம் தேதி நடக்கிறது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறது. இதே உற்சாகத்துடன் இம்முறையும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற கனவில் களமிறங்கியுள்ளது. மும்முனை போட்டி கடந்த தேர்தலில் வீறுகொண்ட காங்கிரஸ் அடுத்தகட்டத்திற்கு செல்லும் வகையில் 2022 சட்டமன்ற தேர்தலை அணுக விரும்புகிறது. மேலும் … Read more

வருமான வரி தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு (Live)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ஆம் திகதி முதல் மேலதிகமாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். விசேட அறிக்கை நாடாளுமன்றில் இன்றைய தினம் வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன், குறித்த காலப்பகுதியில் எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Source link

Bigg Boss Tamil 6: அசீம் அமுதவாணன் இடையே தகராறு, வைரலாகும் வீடியோ இதோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். இதற்கிடையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று … Read more

World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி

நாமக்கல்: உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 500க்கும்‌ மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பொதுமக்களிடம் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் -1ம்‌ தேதி உலக எய்ட்ஸ்  தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள எயிட்ஸ் நோய் மீதான சமத்துவமின்மையை ஒழித்து நோயை முடிவுக்கு கொண்டு வருவதே என்ற மையக் கருத்தை அடிப்படையாக … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மிதமான மழை…

சென்னை: தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. கிழக்கு திசை காற்றின் காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 5 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும்  தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பிரித்தானியாவில் பேருந்துக்காக காத்திருந்த இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

ஸ்கொட்லாந்தில் பேருந்துக்காக காத்திருந்த இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இனவெறித்தாக்குதல் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்கில் வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த பினு (Binu Chavakamannil George), வழக்கம்போல பணி முடித்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையம் ஒன்றில் காத்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் பினுவை இனரீதியாக விமர்சித்துள்ளனர். உடனே அங்கிருந்து அகன்று சென்றுள்ளார் பினு. ஆனாலும் விடாமல் பினுவைப் பின் தொடர்ந்த அந்த இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளார்கள். கடுமையான தாக்குதல் பினுவின் முகத்தில் … Read more