இயற்கை எழில் கொஞ்சும் இடமான மஞ்சளாறு அணை சுற்றுலாத்தலமாக மாற்றப்படுமா?.. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி: தமிழகத்தில் மலைகளின் ராணியாக ஊட்டி, இளவரசியாக கொடைக்கானல் திகழ்கிறது. சீசன் நாட்கள் மட்டுமா? இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் படையெடுத்தபடியே உள்ளனர். அதனைப்போன்றே தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, வருசநாடு, போடிமெட்டு போன்ற பகுதிகளை மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் அருவிகள், மலைகள், அணைகள், நதிகள், குளங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு … Read more

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப்க்கு உண்மை கண்டறியும் சோதனை

டெல்லி: இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் பூனாவாலாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அஃபுதாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடந்தது என ஆணையர் சாகர் பிரீத் தகவல் தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் அழைப்பு

டெல்லி: அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் அழைப்பு விடுத்தார். ஜல்லிக்கட்டு காளையானது 6 வயது வரை போட்டிகளில் பங்கேற்கும், காளைகளை தங்களது குடும்ப உறவு போன்று வளர்ப்பது தமிழர்களின் வழக்கம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது

டீ கடைகளில் 2 குவளை, முடித்திருத்தும் கடைக்குள் மறுப்பு… ஒரத்தநாட்டில் இன்னும் தீண்டாமை?

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தும் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த அக். 2ஆம் தேதி ஒரத்தநாடு தாசில்தாரிடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளார். … Read more

ஆம் ஆத்மி தீவிர பிரச்சாரம்: குஜராத் தேர்தலில் மும்முனை போட்டியா?

குஜராத் மாநிலத்தில் இதுவரை பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருந்த நிலையில், இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்ததால் மும்முனை போட்டியாக மாறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை திரும்பப் பெறாமல் இருந்;திருந்தால் … Read more

துணிவு முடிந்ததும் தாடி மீசைக்கு விடைகொடுத்த அஜித்

நடிகர் அஜித் தற்போது 3வது முறையாக வினோத் இயக்கத்தில் துணிவு என்கிற படத்தில் நடித்து வந்தார். போனி கபூர் தயாரிப்பில், மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் கடந்த சில நாட்களாக சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாடலுக்கு நடன … Read more

குட்டி மாவட்டமான குமரியில் ஒரு டஜன் மாநில நிர்வாகிகள்: அவ்ளோ பேரையும் தி.மு.க மேடையில் ஏற்ற முடியுமா?

குட்டி மாவட்டமான குமரியில் ஒரு டஜன் மாநில நிர்வாகிகள்: அவ்ளோ பேரையும் தி.மு.க மேடையில் ஏற்ற முடியுமா? Source link

தமிழகத்தில் 5ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் … Read more

வீடியோவை தடை செய்ய ஐகோர்ட் உத்தரவு..!

தனது அறையில் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ளும் நீதிபதி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என, டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கோர்ட் நீதிபதி ஒருவர் தனது அறையில் சக பெண் ஊழியருடன் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காட்சிகளை தடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மனுதாரரின் … Read more

ஜெயலலிதா நினைவுநாள் குழப்பம் முதல் ஆட்டம்போடும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வரை! – கழுகார் அப்டேட்ஸ்

கமலாலயத்தில் அடுத்த மல்லுக்கட்டு!ஸ்நேக் Vs தாடி… சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல் என்றால், கமலாலயத்தில் தனித்தனி மல்யுத்தமே நடக்கும்போல. சென்னையில், தான் கலந்துகொள்ள இயலாத நிகழ்ச்சிகளுக்குத் தன் வலதுகரமான ‘ஸ்நேக்’ பிரமுகரை அனுப்பிவைக்கிறாராம் அண்ணாமலை. இது, கட்சிக்குள் புதிதாக நாற்காலியைப் பிடித்திருக்கும் ‘தாடிக்காரரி’ன் வயிற்றில் பொறாமைப் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது. ‘ஸ்நேக்’ பிரமுகரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக, கட்சி வட்டாரங்களில் புரளியைப் பரப்பிவருகிறாராம் ‘தாடிக்காரர்.’ கமலாலயம் டென்ஷனான ‘ஸ்நேக்’ பிரமுகர், ‘தாடிக்காரரி’ன் கடந்தகால வண்டவாளங்களை எடுத்து வெளியேவிட ஆரம்பித்துவிட்டார். … Read more