மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி நின்ற இடத்தில் பூக்கள் வைத்து பக்தர்கள் மரியாதை

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் இன்று பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. யானை லட்சுமி கோயில் முன்பு நின்ற இடத்தில் பக்தர்கள் பூக்கள் வைத்து அன்பை வெளிப்படுத்தினர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று உயிர் இழந்தது. உடல் கூறு ஆய்வு இரண்டு மணி நேரம் நடந்தது. அப்போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டு அதில் 50 மூட்டைகள் உப்பு, விபூதி … Read more

ஆட்சிக் கவிழ்ப்பு சதி | "மோடி வருவதற்கு முன் அமலாக்கத் துறை வரும்"- தெலங்கானா முதல்வர் மகள் கவிதா சாடல்

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயர் அடிபடும் சூழலில் அவர் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அளித்தப் பேட்டியில், “ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கப்போகிறது என்றால் அங்கே முதலில் அமலாக்கத் துறை வரும் பின்னர் பிரதமர் மோடி வருவார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு எதிராக இப்போது திருப்பிவிடப்பட்டுள்ளன. நீங்கள் இதுபோன்ற … Read more

பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவையுங்கள்: அன்புமணி கோரிக்கை!

அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளை முன்னிட்டு டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் … Read more

பிரிட்டன் நிலவரம்: சரியும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை…எகிறும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை!

பிரிட்டனில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான பிரிட்டன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கூடுதல் ஆச்சரியமாக வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் தொகையை விட, பிரிட்டனின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தேசிய புள்ளியியல் … Read more

Gujarat Election: குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு: அதிருப்தி தெரிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி

Gujarat Election 2022 Updates: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் காலை 11 மணி நிலவரப்படி 11.75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டு கட்டங்களாக நடைபெறும் குஜராத் சட்டசபை தேர்தலில் புதிய அரசு அமைய மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். முதற்கட்டமாக 89 இடங்களுக்கு 2 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.   இந்த தேர்தலில் … Read more

பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் யூரியா அறிமுகம்

தூத்துக்குடி: பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாரத் யூரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வேளாண் உற்பத்திக்கு பயன்படும் உரங்களை பாரத் யூரியா என பெயர் மாற்றம் செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தயாரிக்கும் யூரியா உரம், பாரத் யூரியா என பெயர் மாற்றப்பட்டது.

மயிலாடும்பாறையில் புதிய வனச்சரக கட்டிடம் வருமா?.. மாவட்ட வன அதிகாரிகள் கவனிக்க கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனால், மலைக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து … Read more

காங்கிரஸ் எம்.பி. விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி போலீஸ் மேல்முறையீடு

டெல்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவரான சசிதரூரை டெல்லி பாட்டியால நீதிமன்றம் 2021 ஆகஸ்டில் விடுவித்தது. சசிதரூர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி போலீஸ் மேல்முறையீட்டு வழக்கு 2023 பிப்ரவரியில் விசாரணைக்கு வருகிறது.

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு: உண்மையை கண்டறிய அஃப்தாப்புக்கு தொடங்கியது நார்கோ சோதனை!

ஷ்ரத்தா கொலைக் குற்றவாளி அஃப்தாப் அமீன் பூனவல்லாவுக்கு நார்கோ சோதனை (உண்மை கண்டறியும் சோதனை) நடத்த  அஃப்தாப்பை திகார் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக நடந்த பாலிகிராஃப் சோதனையின் போது அஃப்தாப் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நார்கோ சோதனைக்கு முன் அம்பேத்கர் மருத்துவமனையில் அஃப்தாப்பின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. ரோகினியின் தடய அறிவியல் ஆய்வகத்தில் பாலிகிராஃப் பரிசோதனையின் போது, தனது காதலி ஷ்ரத்தா வால்கரை கொலை செய்ததை அஃப்தாப் அமின் ஒப்புக்கொண்டார். ஆதாரங்களின்படி, பல … Read more

அரச ஊழியர்களின் வசதியான சீருடை குறித்த சுற்றறிக்கை

அரச ஊழியர்கள் ,வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக , பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ. கே. மாயாதுன்னே வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: