இந்திய ஒற்றுமை யாத்திரை | ராகுலுடன் நடந்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இன்று காலை உஜ்ஜைனில் அவர் மேற்கொண்ட யாத்திரையின்போது உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர். இன்று யாத்திரையின் 83வது நாளாகும். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியகுமாரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை … Read more

ஆளுநரை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி… அனல் பறக்கும் ஆன்லைன் ரம்மி விவகாரம்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் காலாவதியானது. ஆனால் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனைத்திற்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் மூலம் பதில் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. அவர் தான் எங்களை கேள்வி கேட்க முடியும். ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டத்திற்கு … Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். இதற்கிடையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று … Read more

விஷ ஊசியில் இருந்து பிழைத்த மரண தண்டனை கைதி… புதிய ஆபத்தான முறையை முயற்சிக்க முடிவு

அமெரிக்காவில் மூன்று கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு, இதுவரை முயற்சிக்காத புது முறையை பயன்படுத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ ஊசி மூலமாக மரண தண்டனை மரண தண்டனை கைதியான ஆலன் யூஜின் மில்லர் என்பவருக்கு விஷ ஊசி மூலமாக மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், குறித்த தண்டனை நிறைவேற்றிய நிலையில், அவரது உயிர் பிரியவில்லை என்றே கூறப்படுகிறது. @getty மட்டுமின்றி மருத்துவர்களும் அதை உறுதி செய்ததுடன், … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் 62.71 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபரை விட நவம்பர் மாதத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. செ கடந்த அக்டோபர் மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது கூடுதலாக 1.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் மெட்ரோ ரயில் சேவை ஆலந்தூர்-சென்னை கோயம்பேடு இடையே கடந்த 2015-ல் தொடங்கியது. தற்போது, பரங்கிமலை – சென்ட்ரல், விமானநிலையம் … Read more

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவு

நாகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் 5 செ.மீ., சிதம்பரம், ஆலங்குடு, மதுக்கூர், மாமல்லபுரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

ஜல்லிகட்டுக்கு தடை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: ஜல்லிகட்டுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார்.

திருவள்ளூரில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: பெட்ரோல் குண்டு வீச்சா?

பழவேற்காட்டில் மீன் வியாபாரியொருவரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளைக் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ் (60). மீன் வியாபாரம் செய்து வரும் இவருது வீட்டில் நேற்று நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தாருடன் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர … Read more

வீடியோவால் வந்த சிக்கல் – ஆம் ஆத்மி வேட்பாளர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஸ்வரூப் நகரில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கை துப்பாக்கியுடன் நடனமாடும் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஸ்வரூப் நகரில் போட்டியிடும் ஜோகிந்தர் சிங் என்பவர் கை துப்பாக்கியுடன் … Read more