பள்ளி மாணவர்களில் புத்தக பைகளில் காண்டம், கருத்தடை மாத்திரைகள்!!

மாணவர்களின் பைகளில் ஆணுறைகள்,கருத்தடை சாதனங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் மாணவர்களின் பைகளை சோதனையிட பரிந்துரை வழங்கப்பட்டது. அதன்படி பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டது. அப்படி சோதனை நடத்தியதில் ஏராளமான மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி 8,9ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறைகள், கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில மாணவிகளின் பைகளில் கருத்தடை … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை..!

இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், கிறிஸ்துமஸ் மறு நாளை (டிசம்பர் 26-ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறு நாளை (டிசம்பர் 26-ம் … Read more

`பிரபலமடைவதன் மூலம்…' – 12 மணி நேர அமலாக்கத்துறை விசாரணை குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு நுவ்விலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான லைகர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியானது. அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்து, பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம், எதிர்பார்த்த … Read more

தமிழர்கள் நிம்மதியாக வாழ அரசு இயன்றதை செய்யும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ, திமுக அரசு இயன்ற அனைத்தையும் செய்யும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் உயர, அனைத்து மாவட்டங்களும் சமச்சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர், அரியலூரில் தொழில் பூங்காக்களை உருவாக்கவும், திட்டங்களை … Read more

ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை: 100 பாரம்பரிய சின்னங்கள் மின்னொளியில் ஜொலிக்கும்

புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இன்று முதல் இந்தியா தலைமை தாங்குவதை முன்னிட்டு, நாடு முழுவதும் சுமார் 100 பாரம்பரிய சின்னங்கள், ஜி-20 அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஜொலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதிஅரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள … Read more

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி: 50ஆயிரத்தை இழந்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

சென்னை:  ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ர. 50ஆயிரத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்த நிலையில், தற்கொலை கொண்டுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  கடந்த 2020-ம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசர தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் … Read more

கடலூர் அருகே கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

கடலூர்: சிறுப்பாக்கத்தில் உள்ள கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் கல்யாணி, மகன் அருள் ஹெலன் கிரேஸ் (8), மிஸ்பாசாந்தி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, ரூ.39,640 க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,640-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.4,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.80 அதிகரித்து ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

டெல்லி: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதி மீறல், பயனர்களின் புகார்கள், போலி கணக்குகள், தவறான செய்தி பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் கூறியுள்ளது.

இளம் பெண் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி சடலத்துடன் சாலைமறியல் செய்த உறவினர்கள்!

நாட்றம்பள்ளி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஸ்வேதா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததை அடுத்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் ஸ்வேதாவிடம் தகராறில் ஈடுபட்டதாக … Read more