114 கிளைகளை மூடும் பிரித்தானியாவின் முக்கிய வங்கி: கூறப்படும் காரணம்

பிரித்தானியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான HSBC அடுத்த ஆண்டில் தங்களின் 114 கிளைகளை மூட இருப்பதாக உறுதி செய்துள்ளது. மக்களின் எண்ணிக்கை 65% வரையில் சரிவு குறைவான எண்ணிக்கையிலான மக்களே தொடர்புடைய கிளைகளை நேரிடையாக சென்று வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாலையே இந்த முடிவு எனவும் HSBC நிர்வாகம் தெரிவித்துள்ளது. @getty மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் HSBC வங்கி கிளைகளில் நேரிடையாக சென்று பரிவர்த்தனை செய்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை 65% வரையில் சரிவடைந்துள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

உஜ்ஜைனில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள RD மருத்துவக் கல்லூரியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மத்தியப் … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023- 24 கல்வி ஆண்டில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023- 24 கல்வி ஆண்டில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய வசதிகள் இல்லாததாலும் விதிகள் பின்பற்றாததாலும் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த நிர்வாக அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மூலமாக நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றுமுன்தினம் 69,211 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,764 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும் உண்டியலில் ரூ.5.11 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 27அறைகள் நிரம்பியுள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் … Read more

“நான் ரூ.50,000 வாங்குனது உண்மை; ஆனா….”-லஞ்ச புகார் குறித்து திமுக கவுன்சிலர் விளக்கம்!

கூடலூரில் திமுக கவுன்சிலர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர் வீடுகட்ட அனுமதிக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று காலை வெளியானது. வெளியான உடனே பலராலும் அது பகிரப்பட்டது. சம்பந்தபட்ட கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தபட்டு வருகிறது. இது தொடர்பாக கட்சியின் … Read more

நக்சலைட்டுகள் தாக்குதல் ராணுவ வீரர் வீர மரணம்| Dinamalar

பாலக்காடு : சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தோனி என்ற இடத்தைச் சேர்ந்த சுலைமான் — நிலாவர்னிஷா தம்பதியரின் மகன் அப்துல் ஹக்கீம் 35. சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றிய இவர், நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள சுக்மா மாவட்டம் தப்பைகொண்டா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு நக்சல்கள் … Read more

சதொச வில் ,நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ,நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக புதிய விலைகள் பின்வருமாறு சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை – ரூ. 199 கீரி சம்பா 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுபுதிய விலை – ரூ. 225 பெரிய வெங்காயம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுபுதிய விலை – ரூ. 225 நெத்தலி 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுபுதிய விலை – ரூ. 1150

இந்த அரிசியில் இப்படியும் பண்ணலாமா ?  நீரிழிவு நோய் முதல் இரத்த சோகை வரை ஒரே ரெசிபி போதும்

இந்த அரிசியில் இப்படியும் பண்ணலாமா ?  நீரிழிவு நோய் முதல் இரத்த சோகை வரை ஒரே ரெசிபி போதும் Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02/12/2022 மற்றும் 03/12/2022: தமிழக கடலோர மாவட்டங்கள், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் … Read more