ஒரே நாளில் ரூ.5.11 கோடி உண்டியல் காணிக்கை!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் புரட்டாசி மாதம் 10 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 69,211 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக 5 … Read more

திருப்பூர்: தூக்க மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு – இளைஞர்கள் இருவர் கைது

திருப்பூர் மாநகர் எஸ்.வி. காலனியில் மின்வாரிய அலுவலகம் அருகே மருந்தகம் நடத்தி வருபவர் விக்னேஷ். இவரின் மருந்தகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு, வந்த இரண்டு இளைஞர்கள், தூக்க மாத்திரை கேட்டுள்ளனர். சித்தரிப்பு படம் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்க முடியாது என்று, விக்னேஷ் கூறவே, இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த விக்னேஷின் தந்தை தண்டபாணி இளைஞர்கள் தகராறு செய்வதால் விக்னேஷை வீட்டுக்கு செல்லும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார். அப்போது, அந்த 2 இளைஞர்களும் … Read more

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி எதுவும் இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி விளக்கம்

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, பாதுகாப்புஏற்பாடுகளில் எவ்வித குளறுபடியும் ஏற்படவில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். தமிழக காவல் துறை உளவுப் பிரிவு ஏடிஜிபிஅக். 30-ம் தேதி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பிரதமர்பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் திருப்திகரமாக இல்லை. அவற்றைப் பழுதுபார்க்கவோ, பயனற்றுப்போகும் கருவிகளை அப்புறப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களிலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து, அகற்றும் குழுவினரிடம் உள்ள கருவிகளை, அந்தந்த மண்டல … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவில் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து 7வது முறை ஆட்சிக் கட்டிலில் அமர பாஜக மும்முரம் காட்டி வருகிறது. அதேசமயம் காங்கிரஸ் , ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சரியாக காலை 8 மணிக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 1) – மொத்தம் 19 மாவட்டங்களை சேர்ந்த 89 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் சூரத், ராஜ்கோட், பவ்நகர், ஜாம்நகர் ஆகிய முக்கிய … Read more

இன்று முதல் இடுக்கி அணையை கண்டு களிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று  முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்பட்டுவர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி இன்று முதல் ஜனவரி 31 வரை அணையைக் காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 10 முதல் மாலை 5 மணி வரை அணையை ரசிக்கலாம். வாரந்திர பராமரிப்பு பணிகளுக்காக புதன் கிழமை மட்டும் பயணிகளுக்கு … Read more

ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள், 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள், 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த மாத ஊதியமான ரூ.21,000-ஐ ஒப்பந்த நிறுவனம் தர மறுப்பதாக புகார் எழுந்ததையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு அருகே பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்தவர் கைது

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்யாமல், கடையை மூடிச் சென்ற வீரமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் இரட்டைகுவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சுகேஷின் கூட்டாளி கைது

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் பெண் கூட்டாளி பிங்கி இரானியை டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் நேற்று கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடையவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், டெல்லி திகார் சிறையில் இருந்தபடி தொழிலதிபர்களை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்ததாகவும், அந்த பணத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை தந்ததாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கிறது. இதுதொடர்பாக … Read more

இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதத்தில் சரிவு! தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

பேறுகாலத்தின் போது ஏற்படும் தாய்-சேய் இறப்பு விகிதத்தை இந்தியா வெகுவாக குறைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேறுகால இறப்பு தொடர்பாக இந்திய  தலைமைப் பதிவாளர் சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில்  2014-2016ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 130 என்ற அளவில் இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 2018-20 காலகட்டத்தில்  97 என குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேறு கால இறப்பு விகிதம், கேரளா 19, மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரா 45, தமிழ்நாடு 54, … Read more