ஓராண்டில் 8500 கி.மீ சுற்றியிருக்கிறேன் – முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2023ஆம் ஆண்டை மகிழ்ச்சியாக வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! “ஆண்டொன்று போனால் – வயதொன்று கூடும்” என்று வாழ்வதல்ல வாழ்க்கை. … Read more

'பாஜகவை எனது குருவாக பார்க்கிறேன்..!' – ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி!

“பா.ஜ.க.,வும், ஆர்எஸ்எஸ்சும் என்னை கடுமையாக விமர்க்கின்றன. இதுவே எனக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், என்னை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கிறது,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி துவக்கிய பாரத் ஜோடோ யாத்திரையானது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (ஜனவரி 2) யாத்திரை மீண்டும் துவங்க உள்ளது. பாத யாத்திரையின் போது, ராகுலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய … Read more

பிறந்தது ஆங்கில புத்தாண்டு – மக்கள் உற்சாக வரவேற்பு

ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.  மேலும் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் கடற்கரையில் … Read more

600 ஆண்டுகளில் முதல் முறையாக.. பதவியை துறந்த ஜேர்மனியின் போப் ஆண்டவர் மறைவு

ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக் தனது 95வது வயதில் காலமானார். 16ஆம் பெனடிக் கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக் என மாற்றிக்கொண்டார். 2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார். போப் ஆண்டவர் பதவியை யாரும் தாமாக முன் வந்து துறந்ததில்லை. @giulio napolitano / Shutterstock ஆனால், … Read more

மூத்த குடிமக்கள் சட்டப்படி தந்தைக்கு மாதம்தோறும் ரூ.9 ஆயிரம் ஜீவனாம்சம்: மகனுக்கு கோட்டாட்சியர் உத்தரவு

சேலம்: சேலம் சூரமங்கலம் பழனியப்பா நகரைச்சேர்ந்தவர் ரத்தினவேலு (66). வக்கீலான இவர் சேலம் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எனது மனைவி புஷ்பலதா கடந்த 2018ல் உடல்நலக்குறைவால் காலமாகி விட்டார். எனது மகன் கார்த்திக் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை அருகே ஜோடுகுட்டிப்பள்ளத்தில் வசித்து வருகிறார். குடும்ப சொத்தில் இருந்து பாகப்பிரிவினையாக ரூ.60 லட்சம் வந்தது. அதில் கடனை அடைத்து விட்டு ரூ.25 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தேன்.  வயது முதிர்வு காரணமாக எனக்கு அடிக்கடி மயக்கம், தலைசுற்றல் … Read more

மீனவ பெண்ணாக மாறிய சம்யுக்தா

துவாரகா புரொடக்ஷன் சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கும் படம் கொடுவா. நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில் உருவாகி வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் கதை களத்துடன் உருவாகியுள்ளது. நிதின் சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி … Read more

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

காந்திநகர், குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் வரசியா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு அருண் மகேஷ்பாய் மாவி என்ற 2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த குழந்தை இன்று மாலை வீட்டிற்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து, உடனடியாக தீயணைப்பு மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை நீண்ட போராட்டத்திற்கு பின் உயிருடன் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் … Read more

சவூதி அரேபியாவின் கிளப் அணியில் இணைந்த ரொனால்டோ- இத்தனை கோடிக்கு ஒப்பந்தமா ?

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார். கிளப் … Read more

கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி; சீன அதிகாரிகளை அழைத்து உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை

சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்த பூமிப்பந்தையே உருட்டிப்போட்டு விட்டது. ஆனால் சீனா ஆரம்பத்திலேயே விழித்துக்கொண்டு பொதுமுடக்கம் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. இதனால் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. உலகமே பெரும் உயிரிழப்புகளை சந்தித்தாலும், சீனாவில் இறப்புகளும் கட்டுக்குள் இருந்தன. 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் உலகுக்கு அக்னி பரீட்சையாக … Read more

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் புத்தாண்டு வாழ்த்து

“அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகொண்டு சிறந்ததோர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, ஏனைய அனைத்துத் துறைகளுக்குமான அபிவிருத்தி முயற்சிகளில் செயற்திறமாகப் பணியாற்றுவோம். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்ற தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான மூலோபாயங்களுடன் செயற்பட்டு, மலரும் புத்தாண்டில் வளமானதொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.”