புதுடில்லி: ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
பார்லிமென்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மத்திய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டு குறித்து உருவாகும் புகார்கள், குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும். இந்திய சட்டவிதிமுறைகளை பின்பற்றி விளையாட்டுகள் நடைபெற வேண்டும். விளையாடுவதற்கான தகுதியான வயது குறித்து சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement