உங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்: புது வருடம் குறித்து கனேடிய பிரதமரின் பதிவு


நல்லிணக்கத்தை முன்னெடுப்பது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

புது வருடம்

2023ஆம் ஆண்டு நேற்று பிறந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், கனடாவில் புத்தாண்டு முதல் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்க தடை என்ற அறிவிப்பு வெளியானது.

உங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்: புது வருடம் குறித்து கனேடிய பிரதமரின் பதிவு | Trudeau Said Staying Focused On People In Tweet

@Tijana Martin/The Canadian Press

எனினும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிமக்கள் அல்லாத நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ட்ரூடோவின் பதிவு

இந்த நிலையில் பிரதமர் ட்ரூடோ புத்தாண்டு குறித்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது ஒரு புத்தாண்டு, நாங்கள் உங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் – மேலும் உங்கள் வாழ்க்கையை மிகவும் மலிவானதாக மாற்றுவது, நல்ல வேலைகளை உருவாக்குவது, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, நல்லிணக்கத்தை முன்னெடுப்பது மற்றும் பலவற்றில் கவனம் செலுத்துகிறோம். தொடர்ந்து செல்வோம்’ என தெரிவித்துள்ளார்.     

ஜஸ்டின் ட்ரூடோ /Justin Trudeau

@File

    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.