எங்களை அவர்கள் வில்லன்களாக வைத்திருக்க நினைத்தால்.. நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் இளவரசர் ஹரியின் பேச்சு


தனக்கு தேவை ஒரு குடும்பம் தான் என்றும், நிறுவனம் அல்ல என்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் நேர்காணலில் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் இளவரசர் ஹரி

திங்களன்று வெளியிடப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் நேர்காணல் பகுதியில், இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் பல குறித்து பேசினார்.

அப்போது அவர், ‘எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், ஒரு நிறுவனம் அல்ல’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய ஹரி, ‘எங்களை எப்படியாவது வில்லன்களாக வைத்திருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்தால், அவர்களை சமரசம் செய்ய விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யார் என ஹரி குறிப்பிடவில்லை.

வில்லியம்-ஹரி/William-Harry

@AP


தந்தை-சகோதரரை பெற விரும்பும் ஹரி

அத்துடன் தன் தந்தையைத் திரும்ப பெற விரும்புவதாகவும், தனது சகோதரனைத் திரும்ப பெற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் பிரித்தானிய அரச குடும்பத்தில் தங்கள் அனுபவங்களை ஹரி மற்றும் மேகன் மூடி மறைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

ஹரி/Harry

@CBS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.