செக் குடியரசைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவ்ரடிலோவாவுக்கு தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வீராங்கனை
டென்னிஸிசில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை மார்டினா நவ்ரடிலோவா. செக் குடியரசைச் சேர்ந்த அமெரிக்கரான இவர், 1978 மற்றும் 1990களுக்கு இடையில் ஒன்பது விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர்.
தற்போது 66 வயதாகும் மார்டினா நவ்ரடிலோவா, ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறினார்.
இரண்டு வகையான புற்றுநோய்
இந்த நிலையில் தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மார்டினா ஒரே நேரத்தில் கண்டறிந்தார்.
இது டென்னிஸ் உலகில் உள்ள ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களுக்கு பேரரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆனால் இதுகுறித்து மார்டினா கூறுகையில், ‘இரட்டை வலி தீவிரமானது. ஆனால் சரிசெய்யக்கூடியது. மேலும் சாதமான முடிவை நான் எதிர்பார்க்கிறேன். எனினும் கிடைத்ததை வைத்து போராடுவேன்’ என தெரிவித்துள்ளார்.
பயணம் ரத்து
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்காக மெல்போர்ன் நகருக்கு செல்லும் அவரது திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மாத இறுதியில் மார்டினா மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்ல உள்ளார்.