கிருஷ்ணனின் 101 ஓவியங்களை வரைந்த முஸ்லிம் இளம்பெண்: குருவாயூர் கோயிலுக்கு வழங்கினார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மஜீத். இவரது மகள் ஜஸ்னா சலீம். இளம் வயதிலேயே இவருக்கு கிருஷ்ணன் மீது அதிக பக்தி உண்டு. ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், சிறு வயது முதலே கிருஷ்ணனின் ஓவியங்களை வரையத் தொடங்கினார். அந்த ஓவியங்கள் அனைத்தையும் குருவாயூர் கோயிலுக்கு பலமுறை இலவசமாக வழங்கியுள்ளார். அவை குருவாயூர் கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு முக பாவனைகளுடன் கூடிய கண்ணனின் 101 ஓவியங்களை வரைய ஜஸ்னா சலீம் தீர்மானித்தார். அக்ரிலிக் ஷீட்டில் பேப்ரிக் பெயிண்ட் மூலம் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் கண்ணனின் ஓவியங்களை வரையத் தொடங்கினார். 101 ஓவியங்களை வரைந்து முடித்த அவர், நேற்று குருவாயூர் கோயில் கோயில் தந்திரி சேனாஸ் தினேசன் நம்பூதிரிப்பாடிடம் அவற்றை ஒப்படைத்தார். குருவாயூர் கண்ணன் தான் என்னை வாழ வைக்கிறார் என்று ஜஸ்னா சலீம் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.