முன்னாள் முதலமைச்சர் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில்,
– எதிர்க்கட்சித் தலைவர்
இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை,
நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக,
தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு
மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அதே நாளில் அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார். இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்துள்ளன.
இதற்கிடையே, ஜி – 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்படி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு, மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து விட்டு, எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமையாக மத்திய அரசு கருதி விட்டது என, அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்படி, மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் இந்த முறை, அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விரைவில் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமையாக அங்கீகரித்து மத்திய சட்டக் கமிஷன் கடிதம் அனுப்பி இருப்பதால், அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்த அறிவிப்பு, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.