3 மாத குழந்தையை வீசி கொலை செய்த தாய் கைது| Mother arrested for throwing 3-month-old baby to death

ஆமதாபாத், குஜராத்தில் மூன்று மாத குழந்தையை, மூன்றாவது மாடியிலிருந்து துாக்கி வீசி கொலை செய்த தாயை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள அசர்வாவில், மருத்துவமனை ஒன்றில் உடல்நிலை சரியில்லாத மூன்று மாத குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தது.

இக்குழந்தையை, இதன் தாய் நேற்று முன்தினம் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து துாக்கி வீசியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, குழந்தையின் தாயை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை பிறந்தது முதல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அது படும் வேதனையை பொறுக்க முடியாமல் இந்த துயரமான முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

குழந்தையின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டுள்ள நிலையில், தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.