காசர்கோடு, கேரளாவைச் சேர்ந்த ஜூலி ஏ.மாத்யூ, அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இரண்டாவது முறை தேர்வாகி உள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜூலி ஏ.மாத்யூ. இவர், கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.
பள்ளி பருவத்திலேயே பெற்றோருடன் அமெரிக்கா சென்றார். அங்கு வியாபாரம் செய்து வந்த அவரது தந்தைக்கு சட்ட ரீதியான பிரச்னை ஏற்பட்டது. இதை தொடர்ந்து சட்டம் பயில ஜூலி முடிவு செய்தார்.
சட்டப்படிப்பு முடித்த பின் டெக்சாஸ் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், போர்ட் பெண்ட் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜூலி ஏ.மாத்யூ தேர்வானார்.
நீதிபதி பதவிக்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ஜூலி பெற்றார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளா வந்துள்ள நீதிபதி ஜூலி ஏ.மாத்யூ, காசர்கோடில் உள்ள கணவரின் பூர்வீக வீட்டில், நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பதவி ஏற்றுக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement