மும்பை: அம்பானி குடும்பத்தில் வாரிசுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தொழிலதிபர் அம்பானி குடும்பத்தில், ஆகாஷ் அம்பானியின் குழந்தையின் பிறந்தநாள் விழா பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானியின் கொள்ளுப் பேரனும், முகேஷ் அம்பானியின் பேரனுமான பிருத்வி ஆகாஷ் அம்பானியின் இரண்டாவது பிறந்தநாளையொட்டி ஜியோ கார்டனில் நடைபெற்ற விழாவில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிதா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு திருமணமான, இஷா அம்பானிக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அடுத்து, முகேஷ் அம்பானி – நீதா அம்பானி ஜோடியின் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், மகள் வழி பேரக் குழந்தைகளை பிரம்மாண்டமாக வரவேற்ற முகேஷ் அம்பானியின் குடும்பம், தற்போது மூத்த பேரனின் வாரிசான பிருத்வி ஆகாஷின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளது.
மும்பையில் உள்ள ஜியோ கார்டனில், முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தாவும் தங்கள் மகன் பிருத்வியின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடினார்கள்.
ஆகாஷ் அம்பானியும், ஷ்லோகா மேத்தாவும் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த போது, ஆகாஷ் அம்பானியின் மனைவி ஷ்லோகா மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். பிருத்வி அம்பானியின் பிறந்தநாளுக்கு வொண்டர்லேண்ட் தீம். தோட்டத்தின் வாயிலிலேயே மலர் வளைவு அமைக்கப்பட்டது. வாயில் நீல பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அம்பானி குடும்பத்தின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும், ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் இயக்குநர் கரண் ஜோஹர், தனது இரண்டு குழந்தைகளான ரூஹி மற்றும் யாஷ் ஆகியோருடன் வந்திருந்தார்.
பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொள்ள முகேஷ் அம்பானி நுழைந்ததும், அவரை வரவேற்க ஆகாஷ் அம்பானியே வாயிலுக்கு வந்தார். இருவரும் கேமரா முன் போஸ் கொடுத்தனர்.
பிரபல இயக்குனரும் ரன்பீர் கபூரின் நெருங்கிய நண்பருமான அயன் முகர்ஜி விருந்தில் சாதாரண தோற்றத்தில் காணப்பட்டார். ஆயா சாம்பல் நிற ஜீன்ஸ் அணிந்து செக் ஷர்ட் அணிந்திருந்தார்.
குடும்பத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற்றாது. ராதிகா மெர்ச்சன்ட் -ஆனந்த் அம்பானி திருமணம் நடைபெற்ற இரண்டு நாட்களில் பேரனின் பிறந்தநாள் விழா வந்திருக்கிறது.