லக்னோ: ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியில் இருந்து உ.பி.க்குள் நுழைந்த போது பல ஆயிரம் பேர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி – உ.பி. இடையிலான லோனி நகரம் வழியாக உத்திரப்பிரதேசத்தின் காஸியாபாத்துக்குள் ராகுலின் யாத்திரை நுழைந்தது. உத்திரப்பிரதேசத்துக்குள் நுழைந்த இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்தனர்.