கடந்த ஓராண்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 24 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  கடந்த 2019 ஆண்டில் தாவரவியல் பூங்காவிற்கு 28.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த சூழலில் 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது.

2022ம் ஆண்டு கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். இதில் மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்கள் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.