கரூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ஊர்வலம் சென்றவர்களை தடுத்த பெண் எஸ்.ஐ தாக்கப்பட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொது மக்கள் பல இடங்களில் கட்டபொம்மன் பிறந்த நாளில் அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்குவார்கள். அதுபோல சிலர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்துவார்கள்
இந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் பகுதியில் சில இளைஞர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய காரணத்தால் காவல்துறை பெண் எஸ்.ஐ அவர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் எஸ்.ஐ மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.