வரும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு உட்பட 16 மாநிலங்களின் அலங்கார உறுதிகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்கும் மாநிலங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அலங்கார ஊர்தி அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள கண்டோன்மென்ட் பகுதியில் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா, லடாக், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதிக்குள் அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வரும் 23ஆம் தேதி அணி வகுப்பிற்கான ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.