டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க, தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜபாதையில் நடைபெறும் அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியாக, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அசாம், குஜராத் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு தமிழக அரசின் ஊர்தி தேர்வு செய்யப்படாத நிலையில், இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.