கொரோனா பாதிப்பு: உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு சீனாவுக்கு WHO வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு, சீன அரசை உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது.

சீனாவில், கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், கடந்த மாதம் 7-ந் தேதி முதல், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்த நிலையில், கடந்த சில நாட்களாக, பாதிப்புகள், உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியது.

ஷாங்காய் நகர மருத்துவமனைகளில் படுக்கைகள் நிறைந்ததால், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.