டெல்லி: சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் வேலுநாச்சியார் பணியாற்றினார். ராணி வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.