சென்னையில் மீண்டும் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்: 27 கி.மீ நீளத்திற்கு பணிகள்

சென்னை: பருவமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இவற்றில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1-ல் 10 சிப்பங்கள், சென்னை 2.0 திட்டம் பகுதி 2ல் 10 சிப்பங்கள், வெள்ள நிவாரண நிதியில் 45 சிப்பங்கள், உலக வங்கி நிதியில் 38 சிப்பங்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 4 சிப்பங்கள் மற்றும் சிங்கார சென்னை நிதியில் குளங்கள் சீரமைக்கும் திட்டத்தில் 5 சிப்பங்கள் உள்ளிட்ட பணிகளை வடகிழக்கு பருவமழை மற்றும் குடிநீர் குழாய்கள், மின் மாற்றிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றை இடம் செய்யும் பணிகள் தாமதம் ஆகிய காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது.இந்தப் பணிகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகள் முன்னூரிமை ஒன்று மற்றும் முன்னூரிமை இரண்டு என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. முன்னூரிமை இரண்டில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதி முதல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 ல் 3,907 மீ, சிங்காரச் சென்னை 2.0 திட்டம் பகுதி 2 ல் 2,854 மீ, வெள்ள நிவாரண நிதியின் கீழ் 15,879 மீ, உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 180 மீ, உலக வங்கி நிதி உதவியின் கீழ் 4,917 மீ என்று மொத்தம் 27 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.