இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என இலங்கை கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார்.
முதல் டி20 போட்டி
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ள முதல் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.
இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்த முடியும் என நம்புவதாக இலங்கை அணியின் கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார்.
@AFP
ஷனகா நம்பிக்கை
மேலும் அவர் கூறுகையில், ‘டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் எங்களுக்கு நன்றாக அமையவில்லை.
எனவே இந்த தொடரை சிறப்பாக தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். எங்களுக்குரிய நாளாக அமையும்போது இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
டி20 போட்டி தொடருக்கு பின்னர், இந்தியா – இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 10ஆம் திகதி தொடங்குகிறது.
@Getty Images