டெல்லி கஞ்சவாலாவில் இளம்பெண் மீது மோதிய கார் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமித்ஷா உத்தரவு..!

டெல்லி கஞ்சவாலாவில் இளம்பெண் மீது மோதிய கார் கடனாக வாங்கிவந்தது என்றும், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 5 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுல்தான்புரியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கார் மோதியதில், சக்கரத்தில் பெண்ணின் கால் சிக்கி 13 கிலோமீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி சிறப்பு காவல் ஆணையருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.