டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தின விழா 26ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். தமிழக அலங்கார ஊர்தி இந்திய ராணுவத்தின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, ராணுவ தளவாடங்களில் அணிவகுப்பு நடைபெறும். அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும்.
அந்த வகையில், இந்தாண்டு 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்வுகளில் இறுதியாக ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் சாதனையாளர்கள் என்ற தலைப்பில் ஊர்திகள் இடம் பெற உள்ளன. இதற்கான பணிகளை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM