தமிழ்நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், தமிழக அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், தகுதி வாய்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
இந்த ஆண்டு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இதனிடையே நியாய விலைக் கடைகளுக்கு பொது மக்கள் நெரிசல் இல்லாமல் வந்து செல்ல வசதியாக, டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இன்று (ஜனவரி 3) முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.
டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜனவரி 13ஆம் தேதி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு முதலமைச்சர்
தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின.
இதற்கிடையே, இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.