பெங்களூரு:
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. ஆனாலும் நாங்கள் பரிசோதனைகளை அதிகரித்து உள்ளோம். அக்டோபர் மாதம் தினமும் 1,500 பேருக்கு தான் பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவதால் பெங்களூருவில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.