ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. திருப்பதி கோயிலில் ஒரேநாளில் கிடைக்கப்பட்ட அதிகபட்ச உண்டியல் காணிக்கை இதுவாகும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் அதிகபட்ச உண்டியல் காணிக்கை வசூல் செய்யப்பட்டுள்ளது.