திருமலை உண்டியல் வருவாய் ரூ.7.68 கோடி சாதனை வசூல்| Tirumala bill revenue is a record collection of Rs 7.68 crore

திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில், 7.68 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, தேவஸ்தானம் சில்லரை ரூபாய் நோட்டுகள், மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் காணிக்கை தினசரி 2 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலாவது வழக்கம். தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், உண்டியல் வருவாய் 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி வரை வசூலாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால், உண்டியல் வருவாய், வரலாறு காணாத வகையில் 7.68 கோடி ரூபாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.