நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இது? வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் நடிப்பதை தவிர சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.  இவர் முதன்முதலில் கே.பாக்கியராஜ் இயக்கிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்தவர், 1998ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தில் வில்லனாக நடித்தார்.  ரஞ்சன் என்கிற பெயரில் ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வீரா’ படத்திலும் லிவிங்ஸ்டன் வில்லனாக நடித்திருக்கிறார்.  

இதனை தொடர்ந்து லிவிங்ஸ்டன் ‘சுந்தரபுருஷன்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அதன் பின்னர் சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம் மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார்.  பல படங்களில் நடித்து பிரபலமானவர் தற்போது தனது மகள்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.  தனது குடுமபத்தினருடன் இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது, அதற்கு காரணம் இவரது இரண்டு மகள்களும் தான்.

லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்கள் இருக்கிறார்களா என ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.  இவர் 1997ம் ஆண்டு ஜெஸிஸி எனும் ஆசிரியை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என்று இரு மகள்கள் உள்ளனர்.  இவரது மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ தொடரின் மூலம் தனது நடிப்பை பயணத்தை தொடங்கினார்.  தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகும் ‘அருவி’ தொடரில் நடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.